அஷ்டகர்மம் என்றால் எட்டு விதமான கர்மங்களை கொண்டது.இந்த எட்டு விதமான கர்மங்களையும் கற்று கைதேர்ந்தவன் எதையும் சாதிக்க கூடியவனாக இருப்பான் அவனை சாமானிய மனிதர்களால் வெற்றிகொள்ள முடியாது
எட்டு வித கர்மங்கள்
1)வசியம்
2)மோகணம்
3)ஸ்தம்பனம்
4)ஆக்ருஷ்ணம்
5)உச்சாடணம்
6)வித்துவேஷணம்
7)பேதனம்
8)மாரணம்
வசியம்
வசியம் என்றால் எதையும் தன் வசமாக்குவது அதாவது தன் வசப்படுத்துவது என்று பொருள்
உதாரணமாக: -
1)இராஜ வசியம்
2)தேவதா வசியம்
3)லோக வசியம்
4)ஸ்திரி வசியம்
5)ஜன வசியம்
6 )மிருக வசியம்
இதைப்போல சகல வசியமும் இதற்குள் அடங்கும்
மோகணம்
மோகணம் என்றால் தன்மேல் ஆசைப்பட வைப்பது என்று அர்த்தம்
உதாரணமாக: -
1)பெண் மோகணம்
2)ஆண் மோகணம்
3)லோக மோகணம்
சர்வ மோகணமும் இதில் அடங்கும்
ஸ்தம்பனம்
ஸ்தம்பனம் என்றால் எதையும் கட்டிபோடுவது செயல்படவிடாமல்
உதாரணமாக: -
1)நோய் ஸ்தம்பனம்
2)அக்னி ஸ்தம்பனம்
3)தெய்வ ஸ்தம்பனம்
4)சத்ரு ஸ்தம்பனம்
சகல ஸ்தம்பண வித்தைகளும் இதில் அடங்கும்
ஆக்ருஷ்ணம்
ஆக்ருஷ்ணம் என்றால் எதையும் தன்னை நோக்கி வரவழைப்பது
உதாரணமாக: -
1)தெய்வ ஆக்ருஷ்ணம்
2)சத்ரு ஆக்ருஷ்ணம்
3)மிருக ஆக்ருஷ்ணம்
4)பேய்பூத ஆக்ருஷ்ணம்
5)பெண் ஆக்ருஷ்ணம்
உச்சாடணம்
உச்சாடணம் என்றால் விரட்டுவது என்று பொருள்
உதாரணமாக: -
1)எதிரி உச்சாடணம்
2)துஷ்ட சக்தி உச்சாடணம்
3)பிணி உச்சாடணம்
4)தெய்வ உச்சாடணம்
வித்துவேஷணம்
வித்துவேஷணம் என்றால் பிரிப்பது என்று பொருள்
உதாரணமாக :-
1)நண்பர்கள் வித்துவேஷணம்
2)ஆண் பெண் வித்துவேஷணம்
3)தெய்வ மாந்திரீகன் வித்துவேஷணம்
4)குடும்ப வித்துவேஷணம்
பேதனம்
பேதனம் என்றால் ஒன்றை இன்னோன்றாக மாற்றுவது புத்தியை பேதலிக்க வைப்பது
உதாரமாக:-
1)மிருக பேதனம்
2)ஆண் பெண் பேதனம்
மாரணம்
மாரணம் என்றால் அழிப்பது
உதாரணமாக:-
1)சத்ரு மாரணம்
2)நோய் மாரணம்
3)செய்வினை மாரணம்
எதையும் மாரணம் செய்யலாம்
இந்த எட்டு கர்மத்திலும் கைதேர்ந்த மாந்திரிகனை எவராயினும் வெல்ல இயலாது
இதைவே மாந்திரிகத்தின் அடிப்படை இக்கலையை பயன்படுத்த பலவழிகளை சித்தர்கள் வகுத்து கொடுத்துள்ளனர் அவை அனைத்தையும் பின்வரும் பதிவில் பார்ப்போம்
No comments:
Post a Comment